பான்கார்டு திருத்தம் PANCARD CORRECTION CSC PORTAL TAMIL

சி.எஸ்.சி வழியில் பான்கார்டுக்கு திருத்தம் செய்வது மிகவும் எளிதானது. ஃபான் கார்டை தொலைத்துவிட்டாலோ, பெயர் அல்லது இதர விவரங்களை மாற்ற வேண்டும் என்றாலோ எளிதாக 
சி.எஸ்.சி வழியில் செய்யலாம். இதன் மூலம் ஃபான் கார்டை மீண்டும் பிரிண்ட் செய்யலாம் அல்லது பெயர், புகைப்படம், பிறந்ததேதி தவறாக இருந்தால் மாற்றம் செய்யலாம்.

இதன் மூலம் பெயர் உள்பட அனைத்து திருத்தங்களும் செய்யலாம். தவறான ஸ்பெல்லிங், பெயர் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக பான்கார்டில் மாற்றம் தேவைப்படும். கீழே உள்ள வழிமுறையில் ஆதார் பயன்படுத்தப்படுவதால் , அதில் பெயர் சரியாக இருந்தால் இந்த வழிமுறை மூலம் பான்கார்டில் பெயர் மாற்றம் செய்யலாம். 

தேவையான ஆவணங்கள்

ஆதார்கார்டு,

வாக்காளர் அடையாள அட்டை

ஓட்டுனர் உரிமம்

இல்லையென்றால், பெயர் மாற்றம் செய்யப்பட்ட அல்லது தவறாக உள்ளதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பெயர் மாற்றத்திற்கான அரசாணை, திருமண பத்திரிக்கையுடன் திருமண சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவை.