📜 Terms and Conditions | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

    சபரி ஆன்லைன் சர்வீஸ் (SABARI XEROX & NET CENTER) தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எங்களது சேவைகளைப் பெறுவதற்கு முன்னதாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எங்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

1. Accuracy of Information (தகவலின் துல்லியம்)

User Responsibility: (பயனர் பொறுப்பு) 

  ஆன்லைன் விண்ணப்பங்களுக்காக (ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு) நீங்கள் வழங்கும் தகவல்கள் (பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவை) சரியாக இருக்க வேண்டும். தவறான தகவல்களால் ஏற்படும் விண்ணப்ப நிராகரிப்புகளுக்கு (Rejection) நாங்கள் பொறுப்பல்ல.

 

Verification: (உறுதிப்படுத்துதல்)

  உங்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முன்னதாக, வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியானவை தானா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். உங்களின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.

2. Service Fees (சேவைக் கட்டணம்)

 ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், எங்களது அலுவலகச் சேவைக்கானக் கட்டணமும் (Service Charge - ஜெராக்ஸ், ஸ்கேனிங், டைப்பிங் மற்றும் பதிவேற்றம் செய்தல் போன்றவை) சேர்த்து வசூலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     Non-Refundable: (கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது)

      ஒருமுறை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு (Submit), கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு, அந்தத் தொகை எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது.எனவே, பணம் செலுத்தும் முன் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

 

3. Application Processing (விண்ணப்பம் பரிசீலனை)

   நாங்கள் உங்கள் விண்ணப்பத்தைச் சரியான முறையில் ஆன்லைனில் பதிவு செய்து தருவோம். விண்ணப்பத்தின் மீதான இறுதி முடிவு மற்றும் அதனை அங்கீகரிக்கும் (Approve) அதிகாரம் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு (Government Departments) மட்டுமே உண்டு.

     Timeline: (கால அவகாசம்)

   
    உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் வருவதற்கு ஆகும் காலம், அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் மற்றும் அவர்களின் பணி வேகத்தைப் பொறுத்து மாறுபடும். இதில் எங்களது தலையீடு ஏதும் இருக்காது.

4. Data Privacy (தகவல் பாதுகாப்பு)

    எங்களின் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களின் விபரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். உங்களுடைய ஆதார், தொலைபேசி எண் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை நாங்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளுவோம். உங்கள் அனுமதி இன்றி அவற்றை எக்காரணம் கொண்டும் தவறான முறையில் பயன்படுத்த மாட்டோம்.- இது எங்களது உறுதி.

5. Disclaimer (பொறுப்புத் துறப்பு)

    தொழில்நுட்பக் கோளாறுகள்: அரசு இணையதளங்களில் ஏற்படும் சர்வர் பிழைகள் (Server Errors), இணையதள முடக்கம் அல்லது இணையதள இணைப்புகள் (Links) மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் (Technical Errors) ஏற்படும் தாமதங்களுக்கு எங்களது நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.